கொழும்பு துறைமுக நகரத்தை ஸ்மார்ட் நகரமாக மாற்றுவதற்கு தேவையான ஆதரவையும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தையும் தொழில்நுட்ப அமைச்சு வழங்கும் என தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகளின் பேரில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்
புதிய முதலீடுகளின் வருகையுடன், 5G தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தாண்டு இறுதியில் தீவிரமாக செயற்படுத்தப்படும் என்றும், இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே சில இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.