Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரண தண்டனை நிறைவேற்றத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட மாட்டார்!

மரண தண்டனை நிறைவேற்றத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட மாட்டார்!

இலங்கையின் எந்தவொரு நீதிமன்றத்தினாலும் பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடுவதில்லை என தற்போதைய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு 2019 ஆம் ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையொப்பமிட எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles