தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் உத்தியோகபூர்வ தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று (23) நாடாளுமன்றில் அவர் இதனை கூறினார்.
தேர்தலை நடத்துவதில், ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிலர் மார்ச் 9 தேர்தல் நடத்தப்படும் எனக் கூறுகின்றனர்.
ஆணைக்குழுவின் தலைவரும், உறுப்பினரான மொஹமட்டும் இணைந்து தீர்மானம் ஒன்றை எடுத்து, அதற்காக ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களின் அனுமதியை பெற்றுள்ளனர்.
எனவே, மற்றைய மூன்று உறுப்பினர்களும் இந்த நிலைப்பாட்டில் இருக்கமாட்டார்கள்.
இந்த நிலையில் அது குறித்து கலந்துரையாட வேண்டும். தற்போது தேர்தல் நடத்துவதற்கு நிதியும் இல்லை என்றார்.