Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிதியமைச்சரிடமிருந்து பேரீச்சம்பழத்துக்கு சலுகை

நிதியமைச்சரிடமிருந்து பேரீச்சம்பழத்துக்கு சலுகை

பேரீச்சம்பழம் கிலோவொன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 200 ரூபா விசேட பண்ட வரியிலிருந்து 199 ரூபாவை குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இன்று (28) நள்ளிரவு முதல் பேரீச்சம்பழ இறக்குமதியின்போது  கிலோவொன்றுக்கு  விசேட பண்டவரியாக ஒரு ரூபா மாத்திரமே அறவிடப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.

நோன்பு காலத்தில் இஸ்லாமிய மக்கள் மூன்று பேரீச்சம் பழங்களை உணவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், பேரிச்சம்பழம் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles