Friday, February 13, 2026
28.4 C
Colombo
செய்திகள்உலகம்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து: 22 பேர் காயம்

தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து: 22 பேர் காயம்

பண்டாரவளை – அட்டம்பிட்டிய, மல்வத்தயில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

மல்வத்தயிலுள்ள குறுக்கு வீதியொன்றில் பயணித்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லொறியே இன்று மாலை 3.30 மணி அளவில் விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் நால்வர் தியத்தலாவ வைத்தியசாலையிலும் ஏனையோர் பண்டாரவளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெலுவ மற்றும் சென். ஜேம்ஸ் உள்ளிட்ட தோட்டங்களை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்களே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles