மார்ச் மாத அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகள் உள்ளிட்ட நாளாந்த தொடர் செலவுகளுக்காக 23 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்துக்கு எதிர்பார்க்கப்படும் வருமானம் 173 பில்லியன் ரூபாவாக இருந்தாலும், சம்பளம் மற்றும் தொடர் செலவுகளுக்காக நூற்று 196 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதன்படி 23 பில்லியன் ரூபா பற்றாக்குறை நிலவுவதாக நிதி அமைச்சின் செயலாளர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் இலங்கை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டி 508 பில்லியன் ரூபா எனவும், அதன்படி மார்ச் மாதத்தில் பற்றாக்குறை 554 பில்லியன் ரூபா எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.