Monday, September 1, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை குற்றவாளி இந்தியாவில் கைது

இலங்கை குற்றவாளி இந்தியாவில் கைது

இந்நாட்டில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு இந்தியாவின் தமிழகத்திற்கு தப்பிச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னார் பகுதியைச் சேர்ந்த சிந்துஜன் என்ற 22 வயதுடைய நபர் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

இலங்கையில் பொலிஸாரால் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக சந்தேகநபர் கடந்த 17ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles