ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த பல சிவில் வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மாவட்ட நீதிமன்றத்தின் கோரிக்கையை நிராகரித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை மார்ச் முதலாம் திகதி வழங்க கொழும்பு சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி பிராங்க் குணவர்தன மற்றும் நீதியரசர் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீர்ப்பை மார்ச் முதலாம் திகதி வழங்குவதற்கு ஒத்திவைத்தது.
தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதிவாதிகள் பலரிடமிருந்து நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.