Thursday, February 12, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கி - தோட்டாக்களுடன் ஒருவர் கைது

துப்பாக்கி – தோட்டாக்களுடன் ஒருவர் கைது

களுத்துறை வடக்கில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, மகசீன் மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டுகுருந்த முகாமில் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, ​​அவர் தங்கியிருந்த களுத்துறை வடக்கில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 187 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முப்பது வயதுடைய சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles