Monday, April 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகன்டெக்ட் லென்ஸ் வழங்குவது 6 மாதங்களுக்கு தாமதமாகலாம்

கன்டெக்ட் லென்ஸ் வழங்குவது 6 மாதங்களுக்கு தாமதமாகலாம்

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தொடு வில்லைகளை (Contact lens) வழங்குவது மேலும் 6 மாதங்களுக்கு தாமதமாகலாம் என சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்வைக்கப்பட்ட விலைக்கு தொடு வில்லைகளை வழங்க முடியாது என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளதால் இந்த நிலை தீவிரமடைந்துள்ளது.

சுகாதார அமைச்சு ஒரு வருடத்திற்கு முன்னர் தொடு வில்லைகளை வாங்குவதற்கு டெண்டர் கோரியது.

ஆனால் அரசு முன்வைக்கும் விலைக்கு அவற்றை வழங்க முடியாது என விநியோகஸ்தர்கள், அமைச்சகத்திற்கு அறிவித்துள்ளனர்.

டெண்டர் கோருவோர் கன்டெக்ட் லென்ஸின் விலை திருத்தத்தை கோரினால், திறைசேரிக்கு அறிவிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles