செய்திகள்உள்நாட்டுஅளவுக்கு அதிகமான தியாகங்களை செய்துள்ளோம் - அமைச்சர் பந்துல

அளவுக்கு அதிகமான தியாகங்களை செய்துள்ளோம் – அமைச்சர் பந்துல

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக அவர்கள் வழங்கிய அனைத்து நிபந்தனைகளையும் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இதன் காரணமாக நாளை இருள் சூழ்ந்திருக்காது.

கடன் மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில், அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பாரிஸ் உதவிக் குழுவிடமிருந்து தமக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும், அவை படுகுழியில் விழுவதைத் தடுக்க தலையிடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெறும் சில செயற்பாடுகளினால் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறிகாட்டிகளின் பிரகாரமே தவிர, சர்வதேச உடன்படிக்கைகளை உதைத்து ஆட்சியமைக்கப் போவதில்லை என தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles