செய்திகள்உள்நாட்டுஇலங்கை சர்வதேசத்தின் நம்பிக்கையை இழக்க நேரிடும் - பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

இலங்கை சர்வதேசத்தின் நம்பிக்கையை இழக்க நேரிடும் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம், அது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அவர் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

‘வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதால் இலங்கை சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்ற நம்பிக்கையை இழக்க நேரிடும். நாட்டைப் பெரிய நெருக்கடிக்கு தள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தேசத்தின் நலனுக்காக முன்வருவது அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களின் கடமை.

தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். எதிர்மறையான பெயரைப் பெறுவதைத் தவிர்க்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது ஜனாதிபதியின் கடமை. ஜனாதிபதியும் அரச ஊழியர்களும் இதனை தவறினால் அது அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles