இந்தியாவுக்கான வாராந்த விமான சேவைகளை 88ஆக அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியா, விமானப் பயணிகளுக்கான குமிழி முறைமை நீக்குகின்ற நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
ஸ்ரீலங்கன் விமான சேவை கொவிட்-19 பரவலுக்கு மத்தியிலும் கடந்த இரண்டு வருடங்களில் தங்களது சந்தைகளை விஸ்தரித்திருந்தது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சியோல், சிட்னி, காத்மண்டு, பிராங்ஃபோரட், பாரிஸ் மற்றும் மொஸ்கோ ஆகிய இடங்களுக்கான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.