சப்கரமுவ பல்கலைக்கழகத்தில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் வெளியேறினால் மாத்திரமே மீண்டும் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பல்கலையின் உபவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்தார்.
சப்கமுவ பல்கலைக்கழத்தில் கல்வி கற்கும் முகாமைத்துவ பீடத்தில் முதலாம் வருட மாணவர்களுக்கு பிரிதொரு மாணவ குழுவுக்குமிடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த 16 ஆம் திகதி காலவரையரையின் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்திருந்தது. மீண்டும் மாணவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதனை தவிர்க்கும் வகையில் மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டது. எனினும் சில மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்கியுள்ளதாகவும், அவர்களை வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் கட்டளையை பின்பற்றாது மாணவர்கள் தொடர்ந்து தங்கியிருப்பதால் கற்பித்தல் செயற்பாடுகளை விரைந்து ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுவதாக பல்கலையின் உபவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்தார்.