ஹிக்கடுவ வவல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண்ணிடமிருந்து 600 டொலர்களை ஒருவர் திருடியுள்ளார்.
இந்த ஹோட்டலில் தங்கியிருந்த குறித்த பெண் எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் நேற்று (20) இரவு திரும்பி வந்து பரிசோதித்த போது பணம் காணமல் போனது தெரியவந்துள்ளது.
ரஷ்ய பெண் இது தொடர்பில் ஹோட்டல் முகாமையாளருக்கு அறிவித்ததையடுத்து, முகாமையாளர் ஹிக்கடுவ பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.