Thursday, February 12, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமர்மமான முறையில் உயிரிழந்த இரு சிறார்களின் சடலங்கள் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த இரு சிறார்களின் சடலங்கள் மீட்பு

குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி சென் ஜோகிம் தோட்டத்தில் ஒன்றரை வயது மற்றும் ஏழு வயதுடைய இரண்டு சிறுவர்கள் தேயிலை மலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று (19) பிற்பகல் அப்பகுதியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஒருவர் சடலங்களை கண்டு குருவிட்ட பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் அறிவித்ததை அடுத்து சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

இச்சிறார்கள் கொல்லப்பட்டு தேயிலை மலையில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இத்தோட்டத்தை சேர்ந்த ஏழு வயதுடைய கஜேந்திரகுமார் சர்வநாத் மற்றும் ஒன்றரை வயதுடைய கஜேந்திரகுமார் நிஷாத் ஆகிய இரு சிறுவர்களே இவ்வாறு மரணித்துள்ளனர்.

குழந்தைகளின் தாயான 29 வயதுடைய பெண், கடந்த 19ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் இரண்டு குழந்தைகளுடன் சென்றதாகவும், தாயே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று தமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குழந்தைகளின் தாத்தா மற்றும் அத்தை தெரிவித்ததையடுத்து குறித்த தாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்து காணாமல் போன தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பற்றிய தகவல்களைத் தேடுவதற்காக, பிள்ளைகளின் தந்தை, பெண்ணின் தாய்வீடு அமைந்துள்ள தெரணியகல பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தைகள் உயிரிழந்ததை அறிந்து தாய் ஒரே நேரத்தில் பல வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles