Saturday, August 2, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு

அரச அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் செயலாளர்கள் உட்பட சிரேஷ்ட அரச அதிகாரிகளின் வெளிநாட்டு விஜயங்களின் போது வணிக வகுப்பு விமானங்களை தடை செய்யும் சுற்றறிக்கையை ஜனாதிபதி செயலகம் எதிர்வரும் வாரத்தில் வெளியிடவுள்ளது.

அதன்படி, இதுவரை இந்த வசதியை அனுபவித்து வந்த அதிகாரிகள் இனி வரும் காலங்களில் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களுக்கு செல்லும் போது எக்கனோமி வகுப்பில் பயணிக்க வேண்டும்.

நிலவும் பொருளாதார சூழ்நிலையால் மக்கள் அவதிப்படும் போது, ​​அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும், செலவினங்களைக் குறைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக இந்த சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாகவும் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுற்றறிக்கையில் அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களின் போது தங்கும் ஹோட்டல்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles