பண்டிகை காலத்தில் அரிசி விலை 300 ரூபாவாக அதிகரிக்கும் என ஐக்கிய அரிசி ஆலை சங்க தலைவர் துமித் பெரேராதெரிவித்தார்.
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய ஆரம்பித்த போது உள் நாட்டில் அரிசி விலை 120 ரூபாவாக இருந்தது.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை முறையாக சந்தைப்படுத்தினால் விலை குறையும்.
ஆனால் இறக்குமதியாளர்கள் பொலன்னறுவைக்கு அவற்றை அனுப்பி 180/- வுக்கு விற்கின்றனர்.
இலங்கையை விட இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிக இரசாயன உரத்தை பயன்படுத்தி அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.