இந்தியாவில் இருந்து மீன் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கட்டார் தற்காலிகமாக நீக்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த தடை விதிக்கப்பட்டது.
ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்பு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல மீன்களில் காலரா பக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், கட்டாரில் உள்ள இந்திய தூதரகத்துடன் கலந்துரையாடி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதையடுத்து, குறித்த தடை தற்காலிகமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.