பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை இல்லாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஒளிமயமான சிவராத்திரியில் எமது உறவுகளை வலுப்படுத்த நாம் தீர்மானித்தால், நாடு எதிர்நோக்கும் அனைத்து சவால்களையும் முறியடித்து, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சுபீட்சம் நிறைந்த நாட்டை நிச்சயமாகக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.