கண்டி நகரில் நாளை (19) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
ஜனரஜ பெரஹெரா நடைபெறவுள்ளதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி நாளை மாலை 5 மணி முதல் தலதா வீதி, யட்டிநுவர வீதி, ராஜா வீதி போன்ற பகுதிகளில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரஹெரா முடியும் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.