மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 10 நாட்கள் மியன்மாரில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு மலேசியா சென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மியன்மார் சென்றுள்ளதாகவும், அங்கு அவர் மத ஸ்தலங்களுக்கு செல்லவுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.