Tuesday, December 23, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனது மகளின் பெயரை எந்த பெண்ணுக்கும் வைக்க கூடாது - வடகொரிய ஜனாதிபதி உத்தரவு

தனது மகளின் பெயரை எந்த பெண்ணுக்கும் வைக்க கூடாது – வடகொரிய ஜனாதிபதி உத்தரவு

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், அவரது மகளின் பெயரை நாட்டிலுள்ள வேறு எவரும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

அவர் தனது பத்து வயது மகளான ஜூ ஏ வின் பெயரை வேறு எந்த பெண்ணிற்கும் வைக்க கூடாது என்றும் அந்தப் பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்தில் அவர்களது பெயரை மாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

வட மற்றும் தென் பியாங்யாங்கில் வசிப்பவர்களில் ஜூ-ஏ என்ற பெயரை கொண்ட பெண்களின் பிறப்புச் சான்றிதழை மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

முன்னதாகவே அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை மக்கள் வைத்துக் கொள்வதற்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles