Saturday, August 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் பிரஜாவுரிமை இடைநிறுத்தம்

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் பிரஜாவுரிமை இடைநிறுத்தம்

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் பிரஜா உரிமையை ஏழு வருடங்களுக்கு இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 500 ரூபா அபராதமும் விதிக்கப்படும் என மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மிலுக்கு 42 இலட்சம் ரூபா கையூட்டாக வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles