Saturday, March 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார வாகனங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

மின்சார வாகனங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

நாட்டின் போக்குவரத்து துறையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் கனவை நனவாக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் இயங்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களை மின்சாரமாக மாற்றுவது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளும் வேகா இன்னோவேட்டிவ் இன்ஸ்டிட்யூட்டின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் உற்பத்தித் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் அதற்குப் பங்களிக்கும் பல்வேறு துறைகளின் பங்களிப்பையும் அமைச்சர் அவதானித்துள்ளார்.

மின்சாரமாக மாற்றப்பட்ட முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் ஓட்டுநர் நிலைமைகள் குறித்து அமைச்சர் தனது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

வேகா இன்னோவேட்டிவ் நிறுவனம் தயாரித்த காரையும் இதன்போது அவர் ஆய்வு செய்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles