மீண்டும் பரவும் கொவிட் பரவல் காரணமாக சீனாவின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
சீனாவின் முக்கிய வணிக நகரமான ஷாங்காய் நகரில் பல கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஷாங்காய் நகரின் கிழக்குப் பகுதி இன்று (28) முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரையிலும், மேற்குப் பகுதி ஏப்ரல் முதலாம் திகதி முதல் 5ஆம் திகதி வரையிலும் முடக்கப்பட்டுள்ளது.
அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.