Monday, June 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச அச்சகத்திற்கு மேலதிக பாதுகாப்பு கோரி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

அரச அச்சகத்திற்கு மேலதிக பாதுகாப்பு கோரி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

அரச அச்சக திணைக்களத்திற்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

திணைக்களத்திற்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் உள்ளூராட்சி அதிகார சபைகளின் தேர்தல் அச்சடிக்கும் பணி தடைப்பட்டுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முன்னெடுப்பதற்கு மேலதிக நிதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அரச அச்சக மா அதிபர் கோரியுள்ள நிலையில் இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது.

பணப்பற்றாக்குறையால் தபால் மூல வாக்களிப்பு முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளில் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles