Tuesday, December 23, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலைக்கவசம் அணியாத பெண் - காவலரை கன்னத்தில் அறைந்து தப்பியோட்டம்

தலைக்கவசம் அணியாத பெண் – காவலரை கன்னத்தில் அறைந்து தப்பியோட்டம்

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் உந்துருளியில் பயணித்த பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கன்னத்தில் அறைந்து, வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜா -எல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் கடமையில் இருந்து போக்குவரத்து பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

‘நான் பொலிஸாருக்கு பயப்படாத பெண்’ என்று கூறி, தன்னை தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிளை குறித்து பெண் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரான பெண் சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கண்டறிந்து, அவரைத் தேடி சென்றபோது அந்தப் பெண் நீண்ட காலமாக மனநல நோய்க்காக சிகிச்சை பெற்று வருபவரென வீட்டார் கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜாஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles