Sunday, January 25, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுPUCSL தலைவரின் காரியாலயம் சீல் வைக்கப்பட்டது

PUCSL தலைவரின் காரியாலயம் சீல் வைக்கப்பட்டது

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குறித்த அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை அழிக்க முயற்சிப்பதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரால், கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கையிட்டு பெற்றுக்கொண்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஜனக ரத்நாயக்க தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் நாடு திரும்பிய பின்னர் அலுவலகம் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles