Saturday, January 24, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேயிலையை பயன்படுத்தி சோஸ் கண்டுபிடிப்பு

தேயிலையை பயன்படுத்தி சோஸ் கண்டுபிடிப்பு

தேயிலை இலைகளைப் பயன்படுத்தி உடலுக்கு மிகவும் பயனுள்ள சோஸ் தயாரிப்பதில் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் வெற்றி கண்டுள்ளது.

புதிய தேயிலை இலைகளைப் பயன்படுத்தி இவ்வகை சோஸை உற்பத்தி செய்வதன் மூலம் அதன் தரத்தை அதிகரிக்க முடிந்துள்ளது.

அத்துடன், சந்தையில் கிடைக்கும் மற்ற வகை சோஸ் வகைகளின் செயற்கை சுவையுடன் ஒப்பிடும்போது இயற்கையான சுவை கொண்டதாக இது காணப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது பச்சை நிறத்தில் உள்ளதுடன், மற்ற சோஸைப் போலவே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தேயிலை சோஸுக்கான காப்புரிமையைப் பெறுவதற்கு ஏற்கனவே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழைப் பெற்ற பின்னர், வணிக அளவில் இதைத் தயாரிக்கும் திறன் கொண்ட எந்தவொரு நபருக்கும் அதன் ரெஸிபியை வழங்க தயார் என தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles