Saturday, January 24, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் களுத்துறையில் கைது

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் களுத்துறையில் கைது

களுத்துறையில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின் போது, ​​இருவருக்கும் 11 பிடியாணைகள் நிலுவையில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

1 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஐந்து தங்கச் சங்கிலிகளை கொள்ளையடித்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் 26 மற்றும் 32 வயதுடைய உனவட்டுன மற்றும் களுத்துறை-வடக்கில் வசிப்பவர்களாவர்.

சந்தேகநபர்கள் வசம் இருந்த 31.19 கிராம் தங்கம், பயாகல, மொரோந்துடுவ, அகலவத்தை, பதுரெலிய மற்றும் மித்தெனிய ஆகிய இடங்களில் திருடப்பட்டதாக கூறப்படும் தங்கமும், இருவரும் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களுக்கு எதிராக மாத்தறை, காலி, அவிசாவளை மத்துகம களுத்துறை, கலவான, வெல்லவாய, வலஸ்முல்ல மற்றும் தெய்யந்தர நீதிமன்றங்களிலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் களுத்துறைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles