இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் சதொச நிறுவனம் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
உருளைக்கிழங்கு, வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி,
ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் புதிய விலை 375 ரூபா
ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் புதிய விலை 149 ரூபா
இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசியின் விலை 198 ரூபா
சிவப்பு பருப்பின் விலை 358 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது