Wednesday, April 30, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்வெட்டு தொடர்பான மின்சார சபையின் அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பான மின்சார சபையின் அறிவிப்பு

மின் உற்பத்தி செய்வதற்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் நாளை (26) ‘A’ முதல் ‘L’ வரையிலான 12 வலயங்களுக்கு மேலும் ஐந்து மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

‘B’ முதல் ‘W’ வரையிலான எட்டு வலயங்களில் 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களாக மின்வெட்டு குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

‘A’ முதல் ‘L’ வரையிலான 12 வலயங்களில் காலை 8.00 முதல் மாலை 6.00 வரையபான காலப்பகுதிக்குள் 3 மணி நேரம் 20 நிமிடங்களும், மாலை 6.00 முதல் இரவு 11.00 மணி வரையான காலப்பகுதிக்குள் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

P முதல் W வரையிலான எட்டு வலயங்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையான காலப்பகுதிக்குள் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles