Friday, September 12, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு மரண தண்டனை

பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு மரண தண்டனை

திஸ்ஸமஹாராமவில் சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரியொருவர் (OIC) உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் 2005 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களில், இருவர் தற்போது பொலிஸ் கடமையில் உள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஹங்கம பொலிஸ் குற்றப்பிரிவு பிரிவிலும் மற்றையவர் அரச புலனாய்வு சேவையிலும் இணைக்கப்பட்டுள்ளனர்.

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது பொலிஸ் கடமையில் இல்லை எனவும், இன்னுமொருவர் ஓய்வுபெற்றுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles