குருந்துகஹஹெதெக்மவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வேகமாக வந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னதுவையிலிருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற லொறி இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது லொறியின் சாரதி வாகனத்தை சோதனை செய்து கொண்டிருந்தார்.
இந்த விபத்தில் காரின் சாரதி, அவரது தந்தை மற்றும் இரு குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.
சாரதியின் தந்தையும் அவரது மாமாவும் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 75 வயதுடைய திருக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
சடலங்கள் தற்போது நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.