Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் வருடாந்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு

இலங்கையில் வருடாந்தம் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு

இலங்கையில் வருடாந்தம் சுமார் 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் பிரச்சாரம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் இரத்தப் புற்றுநோய் அல்லது லியுகேமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.

இது தவிர, எலும்பு தொடர்பான மற்றும் மூளை தொடர்பான புற்றுநோய்கள் பொதுவாக குழந்தைகளிடையே பதிவாகும்.

பல குழந்தைகளிடையே பதிவாகியுள்ள புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சையை நாடினால் குணப்படுத்த முடியும்.

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

#Aruna

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles