Wednesday, July 23, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்னாள் கடற்படைத் தளபதிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் உயர் பதவி?

முன்னாள் கடற்படைத் தளபதிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் உயர் பதவி?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய முகாமைத்துவப் பணிப்பாளராக முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரவீந்திர விஜேகுணவர்தன இன்று (14) பதவியேற்கவிருந்ததாக கூறப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ரவீந்திர விஜேகுணவர்தன குறித்து பெரிதும் பேசப்பட்டது.

முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் சுசந்த சில்வாவின் சேவை கடிதம் மூலம் இடைநிறுத்தப்பட்டு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபன சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles