2023 ஆம் ஆண்டிற்கான தேசிய மகளிர் வீராங்கனைகளின் போட்டி கட்டணம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக் குழு தேசிய மகளிர் வீராங்கனைகளின் போட்டிக் கட்டணத்தை உயர்த்த தீர்மானித்தது.
இதன் விளைவாக, வையிட் போல் கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களுக்கான போட்டிக் கட்டணம் ஒரு போட்டிக்கு 250 அமெரிக்க டொலர் முதல் 750 அமெரிக்க டொலர் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அணியில் உள்ள ஒவ்வொரு ரிசர்வ் வீரரும் போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் பெறுவார்கள்.
மேலும், இருதரப்பு அல்லது சர்வதேச போட்டியாக இருந்தாலும், அணி வெல்லும் ஒவ்வொரு போட்டிக்கும், ஒவ்வொரு வீரருக்கும் 250 அமெரிக்க டொலர் வெற்றி போனஸ் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவதற்கும், கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வலுவூட்டுவதற்குமான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.