Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதலர் தினத்தில் பிள்ளைகள் தொடர்பில் விழிப்புடன் இருங்கள்!

காதலர் தினத்தில் பிள்ளைகள் தொடர்பில் விழிப்புடன் இருங்கள்!

இன்றைய தினம் தனது பிள்ளை தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பெற்றோரிடம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ இதனை தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தன்று சிறார்களையும் இளைஞர்களையும் குறிவைத்து பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் பொலிஸார் விழிப்புடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதற்கும், கலந்து கொள்வதற்கும் தடை இல்லை என்றாலும், கடந்த ஆண்டுகளின் அனுபவங்களின் அடிப்படையில், பொலிஸார் விழிப்புடன் இருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் மற்றும் நிகழ்வுகளை சோதனை செய்ய பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles