தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (14) காலை 10.00 மணிக்கு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.
இந்த கலந்துரையாடல் தேர்தல் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்புச் செயற்பாடுகள் மற்றும் வாக்களிப்பு நாள் வரையிலான செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.