வீட்டுக்கடன் மற்றும் உதவித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதற்கான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகர்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு இந்த ஒதுக்கீடுகள் கிடைக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் விதத்தை கருத்திற்கொண்டு புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.