Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரபாகரன் உயிருடன் இல்லை - மறுக்கும் இராணுவம்

பிரபாகரன் உயிருடன் இல்லை – மறுக்கும் இராணுவம்

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியிடப்பட்ட செய்தியை இலங்கை இராணுவம் முற்றாக மறுப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், உயிருடன் நலமாக இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அதன்போது, பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பில், கருத்து வெளியிட்ட இலங்கை இராணுவம், இந்த கூற்றை முற்றாக மறுப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

அதில் “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் தம் வசம் உள்ளதாக” இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், “2009ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரது மரபணு ஆதாரங்களும் எம்வசம் உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles