Friday, June 26, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க நடவடிக்கை

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க நடவடிக்கை

போதைபொருளுக்கு அடிமையானவர்களை மீட்கும் நோக்கில் மேல் மாகாணத்தில் ‘சவிய’ நிகழ்ச்சித்திட்டம் நேற்று (12) பிலியந்தலை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு மேல்மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.

பிலியந்தலை, கெஸ்பேவ, கஹதுடுவ, மத்தேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 200 போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.

அந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

போதைக்கு அடிமையானவர்களுக்கும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் போதைப்பொருள் பாவனைக்கான காரணம், போதைப்பொருள் வாங்கும் முறை, அதற்கான பணத்தை எவ்வாறு சம்பாதிப்பது, ஒரு நாளைக்கு உட்கொள்ளும் போதைப்பொருள்களின் அளவு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பகிரங்க உரையாடல் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மலையகப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மங்கள தெஹிதெனியவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles