ஹட்டன் – திக் ஓயா ஒடாரி தோட்டத்தில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (09) பிற்பகல் 3 மணியளவில் மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹட்டன் திக் ஓயா ஒடாரி தோட்டத்தைச் சேர்ந்த கருபன் காமராஜன் (62) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே மோதலில் உயிரிழந்துள்ளார்.
மருமகனின் தாக்குதலுக்குள்ளான நபர் பலத்த காயமடைந்துள்ளதுடன், அவர் திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் நேற்று (09) இரவு கைது செய்துள்ளனர்.