Saturday, August 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையை விட்டு வெளியேறும் 'மிட்சுபிஷி'

இலங்கையை விட்டு வெளியேறும் ‘மிட்சுபிஷி’

ஜப்பானிய வணிகத் துறையில் முன்னணி வர்த்தக நாமமான மிட்சுபிஷி, இலங்கையில் அதன் செயல்பாடுகளை மார்ச் மாதத்தில் முடிக்க தீர்மானித்துள்ளது.

சாதகமற்ற சர்வதேச மதிப்பீடுகள் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் ஆகியவை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் நடவடிக்கைகளை நிறுத்த மிட்சுபிஷி முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இலங்கையின் வெளிநாட்டுக் கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியமை மற்றும் இலகு ரயில் திட்டம் மற்றும் இயற்கை திரவ எரிவாயு திட்டம் உள்ளிட்ட ஜப்பானின் புதிய திட்ட முன்மொழிவுகளை திடீரென ரத்து செய்தமையும் மிட்சுபிஷியின் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு வழிவகுத்தது.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் பிரதான பங்காளியான மிட்சுபிஷி, ஏறக்குறைய அறுபது வருடங்களாக இலங்கையின் சில உள்கட்டமைப்பு திட்டங்களில் முக்கிய பங்குதாரராக இருந்தது.

அதன்படி, மிட்சுபிஷியின் கொழும்பு அலுவலகத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles