Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது

பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது

பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.

ஹலொலுவ பல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பெண்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், ஆபாசமான செய்திகள் மற்றும் காணொளிகளை அனுப்பியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம், மாத்தறை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியக அதிகாரிகள், நீதிமன்றில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபரின் தொலைபேசி மற்றும் வங்கிப் பதிவுகள் தொடர்பான தகவலின் ஊடாக சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் அவர் வேறு பெண்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles