Wednesday, June 24, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுடிவரவு - குடியகல்வு திணைக்களத்துக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு

பத்தரமுல்லை – சுஹுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் நிலையத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய விடுத்த கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவொன்றும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் பிரிவில் பல்வேறு முறைகேடுகள் கிடைத்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த நாட்களில் பெருமளவானவர்கள் வருகை தருவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles