எரிபொருள் பிரச்சினை காரணமாக, வீடுகளிலும், வெவ்வேறு இடங்களிலும் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்படுகிறது.
இதனால் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதென வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றுக்கு சுமார் 4 பேரளவில், எரிபொருளுடன் தொடர்புடைய தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்த்ரிக் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் கயான் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது வீடுகளில் பெற்றோலை சேமித்து வைக்கப்படுவதால், ஏற்படும் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள், மண்ணெண்ணெய், பெற்றோல், தேங்காய் எண்ணெய் என்பனவற்றை மாற்றிப் பயன்படுத்துவதால் அல்லது தீ மூட்டும்போது பெற்றோலைப் பயன்படுத்துவதால், அதனுடன் தொடர்புடைய விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால், கடந்த தினங்களில் சில உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
எனவே, வீடுகளில் பெற்றோலை களஞ்சியப்படுத்தி வைத்திருப்பவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.