இலங்கையில் தற்போது கைவசம் இருக்கின்ற ஃபைசர் தடுப்பூசிகள் ஜுலை மாதத்துடன் காலாவதியாகவுள்ளன.
இதனை சுகாதார அமைச்சின் கொவிட் நோய் இணைப்பாளர் வைத்தியர் ஹம்தானி தெரிவித்தார்.
எல்லா மருந்துகளையும் போல, ஃபைசர் தடுப்பூசிக்கும் காலாவதி திகதி இருப்பதாகவும், எனினும் அவை காலாவதியாவதற்கு முன்னதாக மக்களுக்கு செலுத்தி முடிக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் பொதுமக்கள் தற்போதும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுவதாகவும், காலாவதி திகதி நிறைவடைந்ததும் அந்த தடுப்பூசிகள் அழிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.