Wednesday, November 20, 2024
27.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டை விட்டு செல்லும் அரச பொறியியலாளர்கள்

நாட்டை விட்டு செல்லும் அரச பொறியியலாளர்கள்

அரசாங்கத்தின் வரிச்சுமையைத் தவிர்ப்பதற்காக 300 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச சேவை பொறியியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக எதிர்வரும் இரண்டு வருடங்களில் இலங்கையின் பொறியியல் சேவை பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர நேற்று (08) தெரிவித்தார்.

அரசுப் பணியில் உள்ள மொத்த பொறியாளர்களின் எண்ணிக்கை 1536 ஆகும். அவர்களில் சுமார் 436 பேர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், 300 பேர் நாடு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை தயார் செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வருடத்தின் நடுப்பகுதியில் இருந்து இலங்கையில் பொறியியல் சேவை பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் எனவும், வீதிகள், நீர்ப்பாசனம், கட்டிடங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் உட்பட அரச சேவையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் சுமார் 50 வீதத்தினால் தடைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#Aruna

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles